2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

அரசியலில் தீவிரமான ஈடுபாடு- அனார்க்கலி ஆகார்ஷா

Super User   / 2010 மே 31 , மு.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் அரங்கில் தனது பெயர் கேள்விப்படாதிருந்தபோதிலும்,  தான் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக நடிகை அனார்க்கலி ஆகார்ஷா தெரிவித்தார்.

தென்மாகாணசபையின்  செயற்பாட்டு உறுப்பினராக தற்போது இருப்பதாகவும் அவர் கூறினார்.

தென்பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான நடவடிக்கையில் தான் ஈடுபட்டிருப்பதாகக் கூறிய அனார்க்கலி ஆகார்ஷா, இதனை தென்மாகாணசபையின் தினவரவு இடாப்பு நிரூப்பிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில், தென்பகுதியில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கில்,  தான் பல சுற்றுப் பிரயாணங்களை மேற்கொண்டிருந்ததாகவும் அனார்க்கலி ஆகார்ஷா தெரிவித்தார்.

இந்த வருட இறுதிக்குள் இன்னும் பல புதிய அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என தாம் நம்புவதாகவும் மேலும் அவர் கூறினார்.

அனார்க்கலியின் அரசியல் பிரவேசத்தை அடுத்து, அரசியலில் நடிகைகள் போட்டியிடுவது தொடர்பில் தென்மாகாணசபை வேட்பாளார் நிஷாந்த முத்துஹெட்டிகம அதிருப்தி வெளியிட்டிருந்தார்.
  Comments - 0

  • divakar Monday, 31 May 2010 08:19 PM

    அரசியலை பற்றிய அறிவு உண்டா? இல்லை.
    நடிப்பு தெரியாதா பெண்ணை அரசியலுக்கு வரவிடுவது மக்களின் முட்டாள்தனம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .