2020 நவம்பர் 23, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியா தீப்பரவல்; ஜனாதிபதி கோட்டாபய அனுதாபம்

Editorial   / 2020 ஜனவரி 07 , பி.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசனை இன்று (7) தொலைபேசியில் அழைத்து அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள தீப்பரவல் குறித்து தனது அனுதாபத்தைத் தெரிவித்துள்ளார்.

2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி, அடிக்கடி ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் என்ற ரீதியில் தற்போது அவுஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள ​அனர்த்தத்தால் அங்குள்ள மக்களின் வேதனைகளை நன்றாகப் புரிந்துக்கொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி கோட்டாபய இதன்போது தெரிவித்துள்ளார்.

இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இலங்கை ஒரு தொகை தேயிலையை அன்பளிப்பு செய்வதாகவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, அவுஸ்திரேலியா பிரதமர் ஸ்கொட் மொரிசனிடம் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--