2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

ஆசிரியரால் தாக்கப்பட்ட மாணவன் படுகாயம்

Editorial   / 2017 ஜூன் 10 , பி.ப. 12:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ். சதீஸ்

ஹட்டன் கல்வி வலயத்துக்குட்பட்ட நோர்வூட் - சென் ஜோன் டிலரி தமிழ் வித்தியாலயத்தில் தரம் 10இல் கல்வி பயிலும் மாணவன் ஒருவர், ஆசிரியர் ஒருவரின் தாக்குதலுக்கு இலக்காகி, பொகவந்தலாவை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவித்தனர்.

அமரேசன் வினுஷான் என்ற மாணவனே இவ்வாறு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த சம்பவம், நேற்று  பிற்பகல் 12.35 மணியளவில் இடம்பெற்றதாக, தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மாணவனுக்கு ஆசிரியர் ஒருவரால் பாட வேளைத்திட்டம் ஒன்று வழங்கிய போது குறித்த மாணவண் இரண்டாவது முறையாக குறித்த பாடத்தை செய்து காட்டியமைக்காக குறித்த ஆசிரியர் மாணவனை தலைபகுதியை பிடித்து கதிரையில் அடித்ததாகவும் மாணவனின் உடம்பில் பின்பகுதியில் கையால் தாக்கியதாகவும் பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர்கள் முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தாக்கப்பட்ட மாணவனின் பெற்றோரால் பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதோடு, பதிவுசெய்யப்பட்ட முறைபாட்டை நோர்வூட் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக, பொகவந்தலாவை பொலிஸார் தெறிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் நோர்வூட், பொகவந்தலாவை  பொலிஸார்  விசாரனைகளை ஆரம்பித்துள்ளதோடு, குறித்த ஆசிரியரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைளையும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .