2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

ஆட்சேபனை தெரிவிக்க ரணில் - மைத்திரிக்கு அவகாசம்

Editorial   / 2020 ஜனவரி 20 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு, ஆட்சேபனை தெரிவிக்க உயர் நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் பல பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல் குறித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்க இந்த அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மார்ச் 6 ஆம் திகதி வரையில் இதற்கான கால அவகாசம் வழங்கப்படுவதாக உயர் நீதிமன்றம் இன்று (20) கூறியுள்ளது.

ஏப்ரல் தாக்குதலை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளாமை தொடர்பில் பொறுப்புக்கூற வேண்டியவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரி, 12 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--