2021 ஏப்ரல் 19, திங்கட்கிழமை

ஆதிவாசிகளுடன் பொலிஸார் மோதல்

Princiya Dixci   / 2016 மார்ச் 25 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆதிவாசிகளின் தலைவரின் வீட்டில் நடந்த நிகழ்வொன்றுக்கு வந்திருந்த ஆதிவாசிக் குழுவொன்றுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடந்த புதன்கிழமை (23) இடம்பெற்ற மோதலில் ரத்துகல ஆதிவாசித் தலைவர் சுத வன்னில்யால எத்தோ, அவரது மனைவி, பிள்ளை மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஆகியோர் காயமடைந்துள்ளனர்.

ஆதிவாசிகளின் தலைவர், அவரது மனைவி மற்றும் பிள்ளை ஆகியோர் பிபில ஆதார வைத்தியசாலையிலும் பொலிஸ் கான்ஸ்டபிள் இங்கினியாகலை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாகக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தக் கிராமத்திலிருந்த வீட்டைத் தாம் சோதிக்கச் சென்ற போது ஆதிவாசிக் குழுவொன்று, தம்மைத் துரத்தித் தாக்கியதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

எனினும், தனது வீட்டில் பிள்ளையொன்றின் பிறந்தநாள் நிகழ்வுக்கு 40 பேர் வரை வந்திருந்த வேளை, ரத்மல்கல பொலிஸ் சாவடியைச் சேர்ந்த 04 பொலிஸ் அதிகாரிகள் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு வந்திருந்தவர்களைத் தாக்கியதாக ரத்துகல ஆதிவாசித் தலைவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவரது மனைவியான டி.எம்.பி. விமலவதி, மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு வீடு இருளாக இருந்த வேளையில் பொலிஸ் அதிகாரிகள் தன்னைக் காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்றதாகக் கூறியுள்ளார். 

மேலும், மகளான டி.எம்.பி. சுதர்மா, தனது குழந்தையின் பிறந்தநாளைக் கொண்டாடியபோது பொலிஸார் வீட்டுக்குள் நுழைந்து கொண்டாட்டத்தைக் குழப்பி அங்கிருந்தவர்களைத் தாக்கியதாகக் கூறியுள்ளார். 

இங்கினியாகலை பொலிஸ் பெறுப்பதிகாரி மகேதரகம தலைமையினான பொலிஸ் குழுவொன்று, இப்பிரச்சினை தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .