2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

ஆய்வுப்பணியில் ஈடுபடுத்தப்பட்ட பஸ் விபத்துக்குள்ளானது

Editorial   / 2020 மார்ச் 14 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தனிமைப்படுத்தபட்ட மருத்து ஆய்வுக்காக பயன்படுத்தபட்ட பஸ் ஒன்று இன்று (14) காலை வேளையில் கெகிராவை பிரதேசத்தில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது. 

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வவுனியாவுக்கு பயணிகளை ஏற்றிச்​ சென்று மீண்டும் திரும்பி வரும் போதே குறித்த பஸ் விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்கு சம்பவித்த போது பஸ்ஸின் சாரதி மாத்திரமே பஸ்ஸில் இருந்துள்ளதுடன்,  அருகிலிருந்த மின் கம்பம், தொலைபேசி கம்பம் ஒன்றின் மீது பஸ் வண்டி மோதியதால்  சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

குறித்த பஸ்ஸில் கொரிய நாட்டிலிருந்து வந்த  36 பேர் வவுனியா பொம்மைமடு பிரதேசத்திலிலுள்ள தனிமைப்படுத்தபட்ட ஆய்வு மய்யங்களுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன்,  குறித்த பஸ்ஸின் சாரதியும் தனிமைப்படுத்தபட்ட ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளதாக இப்பகுதி மக்கள் அநாவசியமாக அச்சங்​களை ஏற்படுத்திகொள்ள வேண்டாம் என அறிவுறுத்தபட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X