2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

ஆஸி. பயணமாகிறார் ஜனாதிபதி மைத்திரி

Editorial   / 2017 மே 23 , மு.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு, அவுஸ்திரேலியாவுக்கு இன்று (23) பயணமாகவுள்ளார். 

அவுஸ்திரேலியப் பிரதமர் மல்கம் டேர்ண்புல்லின் அழைப்பை ஏற்றே அவர், அங்கு பயணிக்கவுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்தது. 

இரண்டு தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கென்பேராவில் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இதே தினத்தில், அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் குடியகல்வு அமைச்சர் பீற்றர் டுட்டனையும் அவுஸ்திரேலிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜூலி பிஷப்பையும், ஜனாதிபதி மைத்தரி சந்திக்கவுள்ளார். 

ஜனாதிபதியும் அவரது தூதுக்குழுவினரும் 26ஆம் திகதி சிட்னியைச் சென்றடைவர் என்றும் தெரிவித்த அப்பிரிவு, அங்கு அவர், அவுஸ்திரேலியாவில் வாழும் இலங்கை வணிக சமுதாயத்தைச் சந்திப்பார் என்றும் கூறியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .