2021 ஜனவரி 27, புதன்கிழமை

இடம்பெயர்ந்த மக்கள் 6 மாதத்திற்குள் மீள்குடியேற்றம்-மில்ரோய் பெர்னாண்டோ

Super User   / 2010 ஏப்ரல் 29 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியிருக்கும் இடம்பெயர்ந்த மக்கள் ஆறு மாதகாலத்திற்குள் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றப்படுவார்கள் என புதிய மீள்குடியேற்ற அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் மில்ரோய் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வவுனியாவுக்கான விஜயத்தை நேற்று மேற்கொண்டிருந்த புதிய மீள்குடியேற்ற அமைச்சர், பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இதனைக் கூறினார்.

வவுனியா நலன்புரி நிலையங்களில் தற்போது 70,000 இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கின்றனர். ஏற்கனவே,  நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த 200,000 மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுமாறு இந்த வாரம் இந்தியா கோரியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .