2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'இணையத்தள அடிமைகளும் மனநோயாளர்களே'

Princiya Dixci   / 2016 ஜூலை 19 , பி.ப. 08:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

'இணையத்தளத்துக்கு அடிமையாதல் என்பது, ஒருவித மனநோயாகும்' என்று கராப்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் மனநல மருத்துவ ஆலோசகர் டாக்டர் ரமணி ரட்ணவீர, நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்துள்ள அவர், 'தற்போதுள்ள நவீன தொழில்நுட்பமானது, கல்வியுடன் ஒன்றிணைந்த ஒரு சாதனமாகும். ஆனால், அவ்வாறான இணைய மற்றும் தொழில்நுட்பத்துக்கு அடிமையாதல் என்பது, ஒரு நபருடைய மனநலத்தை பாதிக்கும்' என்றார்.  

'தற்போதுள்ள மாணவர்கள், பரீட்சைக்குத் தயாராகும் போது, மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். அவர்களை ஒரு நல்ல சூழ்நிலையில் தயார்படுத்துவது, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். இதன் மூலம், அவர்களால் இலகுவாக சாதனை படைக்க முடியும்.

கல்விக்கு இணையம் தேவை என்று ஊக்கப்படுத்தப்படுகின்றமை தவிர்க்க முடியாத விடயமாகும். இந்த இணையத்தளத்துக்கு அடிமையாவதன் மூலம், மாணவர்கள் பரீட்சைகளில் தோல்வியடைகின்றமையானது மனநிலை பாதிப்பை ஏற்படுத்தும்.

போதைப்பொருள் மற்றும் மதுபானம் போன்றவற்றுக்கு அடிமையாவதால் ஏற்படும் நோயைப் போன்று, இதுவும் உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது. அதிகமாக சமூக வலைத்தளங்களில் தங்களை அதிகம் ஈடுபடுத்தும் மாணவர்களுக்கு, எந்தவகையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன என்பது தொடர்பில் எம்மிடம் சாட்சிகள் உள்ளன. எனவே, இணையத்தளத்துக்கு அடிமையாகின்றமை ஒரு மனநோயாகவே கருதப்படுகின்து' என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .