2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

இத்தாலியில் வேலை வாய்ப்பு; மக்களை ஏமாற்றிய வெளிநாட்டவர் கைது

Super User   / 2010 ஜூலை 05 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இத்தாலியில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுப்பதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்த வெளிநாட்டவர் ஒருவரை மோசடிகள் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

குறித்த மக்களிடம் நிதி மோசடியில் ஈடுபடும் நோக்கத்தில் செயற்பட்டுள்ள மேற்படி சந்தேகநபர், இலங்கைக்கான விசா அனுமதிப்பத்திரம் முடிவடைந்த நிலையில் தங்கியுள்ளார் என்று குற்றஞ்சாட்டப்பட்டது.

கொழும்பில் அமைந்துள்ள பிரபல தொடர்மாடியொன்றில் தங்கியுள்ள மேற்படி சந்தேகநபர், தான் தங்கியிருந்தமைக்கான வாடகையினையும் வழங்கியிருக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபரின் உடல்நிலை மோசமாகியுள்ளதால், சிறைச்சாலை வைத்தியசாலையில் அவரை அனுமதித்துள்ளதாக பொலிஸார் கூறினர்.

 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--