Editorial / 2018 செப்டெம்பர் 18 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.நிதர்ஷன், டி.விஜிதா
யாழ்ப்பாணத்தில், ஆராய்ச்சி நிலையங்களை அமைப்பதற்கு, தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி, உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென, தமிழ்நாட்டு கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் உறுதியளித்தார்.
அத்துடன், இலங்கையின் கல்வி தரத்தை உயர்த்துவதற்கு, தமிழக அரசாங்கம் மட்டுமன்றி, மத்திய அரசாங்கமும் இணைந்து பல உதவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துமெனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு, இன்று (18) 50 ஆயிரம் புத்தகங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்துரையாற்றிய அவர்,
இந்தியாவில் உள்ள ஆராய்ச்சி மையங்கள் போன்று, யாழ்ப்பாணத்திலும் ஆராய்ச்சி மையம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, விவசாய கமநல பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளதாகத் தெரிவித்த அவர், தமிழக முதலமைச்சருடன் கலந்துரையாடி அதற்கு உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்தார்.
அதேபோன்று, யாழ்ப்பாணத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில், ஆராய்ச்சி மையங்களை நிறுவுவதற்கு உதவ வேண்டுமென, கல்வி அமைச்சர் விடுத்த வேண்டுகோளையும், தமிழக முதலமைச்சரிடம் தெரிவித்து, அதற்குரிய நடடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் அவர் உறுதியளித்தார்.
7 minute ago
17 minute ago
21 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
17 minute ago
21 minute ago
25 minute ago