2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

இந்தியா வரும் மஹிந்த ராஜபக்ஸவிடம் இனப்பிரச்சினை தீர்வுக்கு மன்மோகன்சிங் வலியுறுத்த வேண்டும் - கருணாந

Super User   / 2010 ஜூன் 06 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பில் வலியுறுத்த வேண்டும் எனக் கோரி அந்நாட்டு பிரதமர் மன்மோஹன்சிங்கிற்கு கலைஞர் கருணாநிதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார் என்று தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார். இதன்போது இந்திய பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் போதே இந்த வலியுறுத்தல் செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2009ஆம் ஆண்டுக்குள் தமிழ் மக்களை அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்புவதாக இலங்கை அரசு உறுதி அளித்தது. ஆனால் இன்னமும் 80ஆயிரம் தமிழர்கள் முகாம்களிலேயே வசித்து வருகின்றனர் என்றும் முதல்வர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், மீள்குடியேற்றம் செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கான பொருளாதார வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ள முதல்வர், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு காண ஜனாதிபதி மஹிந்தவிடம்  வலியுறுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
  Comments - 0

  • koneswaransaro Monday, 07 June 2010 02:46 PM

    கருணாநிதி ஏதோ நாடகம் போடுகிறாரோ என்று சந்தேகம் வருகிறது. இலங்கைத் தமிழர்கள் விழிப்பாக இருக்கவேண்டும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--