George / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தோனேஷியாவின் ஜகார்த்தா நகரில், நாளை செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பமாகவுள்ள 12 ஆவது உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்தில் கலந்து கொள்வதற்காக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு, இன்று திங்கட்கிழமை (02) இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளார்.
இந்த மாநாடு, நாளை 2ஆம் திகதி முதல் 4ஆம் திகதி வரை நடைபெறுவுள்ளது. 100 நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் 2,500 பேர், இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதுடன், உலக இஸ்லாமிய பொருளாதார மன்றத்துக்காக இலங்கை முதல் முறையாக அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை செவ்வாய்க்கிழமை (02) ஆரம்பமாகவுள்ள மாநாட்டின் ஆரம்பநிகழ்வின் போது, பிரதமர் உரையாற்றவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடோவா, நிதியமைச்சர் முல்யானி இன்ராவாடி மற்றும் கடல் சார் விவகார அமைச்சரான லாஹட் பின்சார் பன்ஜைடான் ஆகியோரை பிரதமர் சந்திக்கவுள்ளார்.
பிரதமரின் பாரியாரான மைத்திரி விக்கிரமசிங்க, அமைச்சர் கபீர் ஹாசிம், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம் பௌசி, பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க, பிரதமரின் செயலாளரான சமன் ஏக்கநாயக்க, ஐந்தாண்டுத் திட்டத்தின் தலைவரான அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர், இவ்விஜயத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
3 hours ago
25 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
25 Oct 2025