2025 ஜூலை 09, புதன்கிழமை

இந்திய-இலங்கை விமானச் சேவைகள் தாமதம்

Kanagaraj   / 2016 டிசெம்பர் 26 , மு.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கும் - இந்தியாவுக்கும் இடையிலான விமானச் சேவைகள் யாவும் இன்று திங்கட்கிழமை நண்பகல் 12 மணிவரையிலும் தாமதமாகும் என்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் கிழக்கு எல்லையில் ஏவுகணைகள் சில, சோதனைக்கு உட்படுத்தப்படுவதனால், தாமதம் ஏற்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதனடிப்படையில் 10 சேவைகள் தாமதமாகும். என்றும் அந்த நிலையம் அறிவித்துள்ளது.

ஜகர்த்தா மற்றும் சிங்கபூர் நோக்கி, இன்றுக்காலை புறப்படவிருந்த விமானச்சேவைகள் இரண்டும், இன்று நண்பகல் 12 மணிவரையிலும் தாமதப்படுத்தப்படுள்ளது.

இதேவேளை, இன்றுக்காலை 8:30 மணிமுதல் பகல் 12:30 வரையிலும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .