2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

இனங்களை சீர்குலைப்பவர்களை ‘அரசாங்கம் தகர்த்தெறியும்’

Gavitha   / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

“சுயலாபம் தேடும் பொருட்டு, இனங்களுக்கிடையில் நிலவியுள்ள நட்புறவைச் சீர்குலைக்க முயற்சிக்கும் தீய சக்திகளால் மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை, அரசாங்கம் உடனுக்குடன் தகர்த்தெறியும்” என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்தார்.  

மல்வானை அஹதிய்யா பணிமனையில், அஹதிய்யா பாடசாலைக்கென ஒரு தொகுதி பிளாஸ்டிக் கதிரைகளும் கூடாரங்களும் பகர்ந்தளிக்கும் நிகழ்வு, நேற்று நடைபெற்றது. இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,  

“பொறுமை என்ற சொல்லுக்கு உதாரணமாக விளங்கும் முஸ்லிம் சமூகத்தினருடன் ஒற்றுமையாக வாழ முடியாதவர்களுக்கு, இந்நாட்டில் மாத்திரமல்ல உலகில் எந்த மூலை முடுக்கிலும் வாழ முடியாது. பொறுமையை நாம் முஸ்லிம் சமூகத்தினரிடமிருந்தே கற்றுக்கொள்ள வேண்டும். 

இனத்துவேசத்தை தூண்டுபவர்களுக்கான சட்டரீதியான தண்டனையைத் துரிதப்படுத்த, சட்டதிட்டங்களில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டருக்கின்றது. இது தொடர்பாக சகல தரப்பினரிடமிருந்தும் கருத்துக்கள் பெறப்பட்ட வருகின்றன” என்று அவர் தெரிவித்தார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--