2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

'இனவாதச் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவும்'

Yuganthini   / 2017 மே 21 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்

“நாட்டிலுள்ள சட்டம், ஒழுங்கை நிலைநாட்டி, சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்தும் வண்ணம், இனவாதச் செயற்பாடுகளை உடன​டியாகக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என, நல்லாட்சிக்கான தேசிய முன்னணி அரசாங்கத்திடம்  வலியுறுத்தியுள்ளது.

“கடந்த சில தினங்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்ற இன ரீதியிலான அச்சுறுத்தல்களும் இனவாதச் சம்பவங்களும், அமைதியை விரும்பும் அனைத்து மக்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளன.

இது நாட்டின் சட்டம், ஒழுங்கை அச்சுறுத்தும் போக்காகவும் இது மாறியுள்ளது. இந்தக் குழப்பகரமான நிலமையை அரசாங்கம் உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்” என்றும் அம்முன்னணி கோரியுள்ளது.

“மீண்டும் பழையபடி, சிறுபான்மையினருக்கு எதிரான இன வெறுப்புப் பேச்சுகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. இது, மிகத் தெளிவான சட்டம், ஒழுங்குப் பிரச்சினையாகும். ஆனால், பொலிஸ் மா அதிபரோ பொலிஸ் திணைக்களமோ இது தொடர்பில் பாராமுகமாகவே நடந்துகொள்கின்றன” என, முன்னணி குற்றஞ்சாட்டியது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X