2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

இனிப்பு ஹெரோய்ன் விற்க முயன்ற இலங்கை அகதிகள் கைது

George   / 2016 ஜூலை 15 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராமநாதபுரத்தில் சீனியை ஹெரோய்ன் போதைப் பொருள் எனக் கூறி விற்க முயன்ற இலங்கை அகதிகள் 3 பேர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராமநாதபுரம் ரயில் நிலையத்துக்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான முறையில் 4 பேர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த கியூ பிரிவு பொலிஸார் விசாரணை செய்துள்ளனர்.

இதன்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணான பதில்களை தெரிவித்தனர். அவர்களிடம் 850 கிராம் எடையுள்ள சீனி இருந்தது. இது போதைப் பொருள் எனவும், அதிக விலைக்கு விற்பதற்காக வைத்திருந்ததாகவும் விசாரணையில் தெரிவித்தனர்.

சீனியை ஹெராயின் போதைப் பொருள் எனக் கூறி அதிக விலைக்கு விற்க முயன்றதாக அந்த 4 பேரையும் பொலிஸார் கைது செய்து அவர்களிடமிருந்த 850 கிராம் சீனியை கைப்பற்றியுள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் அருகே எருமைப்பட்டி கிராமத்தை சேர்ந்த கண்ணன் (27), விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த யோகேஸ்வரன் (31), முகம்மது ஹன்சூர் (19), முகம்மது இக்பால் (56) ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா, ஓமன் உள்ளிட்ட வெளிநாடுகளின் பணம் மற்றும் 4 சிம் கார்டுகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட நால்வரையும், பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களையும் கியூ பிரிவு பொலிஸார், இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X