2021 மே 16, ஞாயிற்றுக்கிழமை

இன்று முதல் குளிர்பான போத்தல்களுக்கு குறியீடு

Gavitha   / 2016 ஓகஸ்ட் 01 , மு.ப. 05:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

குளிர்பானங்களில் வண்ணக்குறியீடுகளை இட்டு, குளிர்பானங்களில் அடங்கியுள்ள சீனியின் அளவை குறிப்பிடுவதற்காக முறைமை இன்றிலிருந்து அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவால் கையொப்பம் இடப்பட்டுள்ளது. 1980ஆம் ஆண்டு 36ஆம் இலக்க சட்டத்தின் 32ஆவது பிரிவின்  பிரகாரம், ஒரு குளிர்பான போத்தலில் 11 கிராமுக்கும் அதிகமான சீனி அடங்கியிருக்குமாயின், அந்தப் போத்தல் சிகப்பு குறியீட்டைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் ஒரு குளிர்பான போத்தலுக்குள் 2-11 கிராம் சீனி மாத்திரம் அடங்கியிருந்தால் மஞ்சல் நிற குறியீடு கொண்டிருத்தல் வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் 2 கிராமுக்கு குறைவான சீனி குளிர்பான போத்தல்களில் உள்ளடங்கியிருக்கும் போது, அதில் பச்சை நிற குறியீடு குறிக்கப்பட்டிருந்தல் வேண்டும்.

குளிர்பானங்களில் உள்ளடங்கியிருக்க வேண்டிய சீனியில் அளவு குறித்தான கலந்துரையாடல்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பல குளிர்பான உற்பத்தி நிறுவனங்களுடன் நடத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .