Editorial / 2020 ஜனவரி 16 , மு.ப. 11:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். நிதர்சன்
யாழ். வடமராட்சி கிழக்கு- நாகர்கோவில் பகுதியில் இராணுவத்தினருக்கும் இளைஞர்களுக்கும் இடையில் மோதல் இடம்பெற்றுள்ள நிலையில் 4 இளைஞர்களை இராணுவம் கைது செய்துள்ளதுடன் குறித்த பகுதியை இராணுவம் சுற்றிவளைத்துள்ளதால் பதற்றம் நிலவுகிறது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்று நள்ளிரவு குறித்த பகுதியில் இராணுவ வாகனத்துக்கு வழி விடவில்லை என கூறி இளைஞர்கள் சிலருடன் இராணுவத்தினர் முரண்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இரு தரப்புக்குள்ளும் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்த மோதலில் இரு தரப்பிலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படும் நிலையில், உடனடியாக சம்பவ இடத்தில் இராணுவம் குவிக்கப்பட்டு 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் உடனடியாக பருத்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு தொடக்கம் குறித்த பகுதியை இராணுவம் முற்றுகையிட்டு தொடர் சோதனை நடாத்திவருவதாக கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள்- இராணுவம் இடையில் முறுகல் நிலை காணப்படுவதாகவும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு இன்று காலை சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
11 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
31 minute ago