2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

இரு தரப்பினர் இன்று புறக்கணிப்பர்

Yuganthini   / 2017 ஜூலை 24 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன், எஸ். நிதர்ஷன், எம்.றொசாந்தன்
யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம். இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தைக் கண்டித்து வடமாகாணத்தில், இன்றுத் திங்கட்கிழமை பணிப் புறக்கணிப்புகள் இடம்பெறவுள்ளன.  

வடமாகாண சட்டத்தரணிகள் மற்றும் வட மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் இந்தப் பணிப் புறக்கணிப்புகளில் ஈடுபடவுள்ளனர்.   

இந்தப் பணிப் புறக்கணிப்புத் தொடர்பில் வட இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   

நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகமானது மிலேச்சத்தனமான செயற்பாடாகும். நல்லாட்சி அரசியல் இவ்வாறான செயற்பாடுகள் இடம்பெறுவதனை நாம் கண்டிக்கின்றோம்.  

நீதித்துறைக்கே இந்நாட்டில் பாதுகாப்பு இல்லையாயின் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பதனை சிந்திக்க தலைப்பட்டுள்ளோம்.   

நீதிபதியை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலானது இலங்கை நீதித்துறைக்கு விடுக்கப்பட்டுள்ள பாரிய அச்சுறுத்தலாகும் என்பதனால் அதனை கண்டித்து, பணிப் புறக்கணிப்பில் ஈடுபடத் தீர்மானித்துள்ளோம்.  

வடக்கில் உள்ள சமூகம் சார் அமைப்புகள், சமூக அக்கறைகொண்ட சங்கங்களையும் எம்முடன் இணைந்து இன்றைய தினத்தில் ஒத்துழைப்பு வழங்குமாறு கோருகின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .