2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

இறக்குவானை லயன் தொகுதியில் கைக்குண்டு தாக்குதல்;15பேர் படுகாயம்

Super User   / 2010 மே 23 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குவானை, சின்னதோட்டம் பகுதியிலுள்ள லயன் தொகுதியொன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் 10பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்களில் நான்கு சிறுவர்கள், ஒன்பது பெண்கள் உட்பட 15பேரே காயமடைந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடக பேச்சாளரும் பொலிஸ் அத்தியட்சருமான பிரஷாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.

அத்துடன் குறித்த குண்டுத் தாக்குதலை நடத்தியதான சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தாக்குதலின் போது மேற்படி லயன் தொகுதியிலுள்ள அறையொன்றுக்குள் தொலைக்காட்சியினைப் பார்வையிட்டுக்கொண்டிருந்தவர்களே சிக்குண்டுள்ளனர்.

இவர்கள் தற்போது இறக்குவானை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதை அடுத்து அவர்கள் இரத்தினபுரி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--