2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐ.நா தலையிடாது- யசூஷி அகாஷி

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் உள்விவகாரங்களில் ஐக்கிய நாடுகள் சபை தலையிடக் கூடாது  என ஜப்பானின் விசேட தூதுவர் யசூஷி அகாஷி தெரிவித்தார்.

கொழும்பில் சற்று முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே, அவர் இவ்வாறு கூறினார்.

ஆனாலும், ஐக்கிய நாடுகள் சபையானது இலங்கை அரசாங்கத்திற்கான அறிவுறுத்தல் மற்றும் ஆலோசனைகளை வழங்கும் எனவும் யசூஷி அகாஷி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் பான்கீமூனுக்கு ஆலோசனை வழங்குவதற்காக நியமிக்கப்படவுள்ள நிபுணர் குழு, இலங்கைக்கான உள்ளீடுகளையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு நிபுணர்கள் குழு ஒத்துழைப்பு வழங்கக் கூடிய வகையில் செயற்பட வேண்டும் எனவும் யசூஷி அகாஷி  தெரிவித்தார்.

அத்துடன், யுத்தத்தின் பின்னரான இலங்கையின் முன்னேற்றகரமான  நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த யசூஷி அகாஷி, நாட்டில் ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பம் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

யசூஷி அகாஷி 20ஆவது தடவையாக விஜயத்தை மேற்கொண்டு கடந்த 15ஆம் திகதி இலங்கை வந்திருந்தார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--