2021 ஜனவரி 25, திங்கட்கிழமை

இலங்கையர் நால்வர் ஆஸ்திரேலிய அரசாங்கத்தினால் நாடுகடத்தல்

Super User   / 2010 மார்ச் 19 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் புகலிடம் கோரிச் சென்ற நான்கு இலங்கையர்களை ஆஸ்திரேலிய அரசாங்கம் நாடுகடத்தியுள்ளது.

இந்த நான்கு இலங்கையர்களும் அகதி அந்தஸ்துக் கோரி முன்வைத்த விண்ணப்பம் வெற்றியளிக்கவில்லை என குடிவரவு மற்றும் பிரஜா உரிமை திணைக்களத்தின் பேச்சாளர் இன்று தெரிவித்தார்.

இவ்வாறு திருப்பியனுப்பப்பட்டவர்களில் இரண்டு தமிழர்கள், ஒரு சிங்களவர் மற்றும் ஒரு முஸ்லிம் அடங்குவதாகவும் அவர் கூறினார்.

கடந்த 2008ஆம் ஆண்டு அரசியல் புகலிடம் கோரி விண்ணப்பித்திருந்த 80 பேர் ஆஸ்திரேலியாவிலிருந்து, இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .