2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

இலங்கையில் மனித உரிமை மீறல்;சுயாதீன விசாரணை தேவை -பிலிப் அல்ஸ்டன்

Super User   / 2010 ஜூன் 04 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் இடம்பெற்றிருந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டிய தேவை உள்ளதென ஐக்கிய நாடுகள் சபையின் விசேட பிரதிநிதி  பிலிப் அல்ஸ்டன் தெரிவித்துள்ளார்.

பிலிப் அல்ஸ்டன் வெளியிட்டு வைத்த  வருடாந்த அறிக்கையிலேயே, இதனைக் கூறினார்.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் கடந்த வருடம் இடம்பெற்றிருந்த யுத்தத்தில் 30,000 பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்ததுடன், அங்கு மனித உரிமை மீறல் தொடர்பில் பாரிய வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதாகவும் பிலிப் அல்ஸ்டன் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையிலேயே, சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டியது அவசியம் எனவும் பிலிப் அல்ஸ்டன் குறிப்பிட்டார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--