2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்தில் ’அரசியலைப் புகுத்தக் கூடாது’

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்

இலங்கை - இந்திய மீனவர்கள் பிரச்சினையை, அரசியல் கண்கொண்டுப் பார்க்காது, மனிதநேயத்தின் அடிப்படையிலேயே அணுக வேண்டும் என்று, சபாநாயகர் கரு ஜயசூரிய வலியுறுத்தியுள்ளார்.

இரு நாட்டு மீனவர்களும் வாழ்க்கைப் போராட்டத்தில் இருப்பதையே, இதனூடாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்திய அவர், மீனவர் பிரச்சினையை வைத்து அரசியல் இலாபம் தேடக்கூடாது என்றும் எச்சரித்தார்.

இந்தியா, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.இராமச்சந்திரனின் 102ஆவது பிறந்த தின நிகழ்வு, கண்டி பொல்கொல்ல கூட்டுறவுச் சங்க மண்டபத்தில், நேற்று  (16) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்துரையாற்றிய அவர், இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையில் சில கருத்து வேறுபாடுகள் இருந்ததாகவும், அந்தக் கருத்து வேறுபாடுகள் காரணமாக, இரு நாடுகளுக்குமான உறவுப் பாலத்தில் பல்வேறு மாற்றங்களும் தாக்கங்களும் ஏற்பட்டனவெனவும் குறிப்பிட்டார்.

இலங்கையின் உயர்மட்டக் குழுவினர், தமிழ்நாட்டுக்குச் சென்று, தமிழகத்தின் அனைத்துத் தலைவர்களையும் சந்தித்து, தங்களது நல்லெண்ண முயற்சிகளை வலுவடையச் செய்யவுள்ளதாகவும், அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இலங்கையில் பிறந்து, இந்தியாவில் பிரகாசித்த எம்.ஜி.ஆரைப் பாராட்டுவது தமது கடமை என்று குறிப்பிட்ட அவர், தமிழக அமைச்சர் செங்கோட்டையனின் இலங்கை விஜயத்தை, வரலாற்றில் இடம்பெறக்கூடிய சிறப்பு நிகழ்வொன்றாகவே, தான் கருதுவதாகவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--