2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இலங்கை தமிழ் அகதி தற்கொலை முயற்சி

Niroshini   / 2016 மார்ச் 27 , மு.ப. 08:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த நபர் ஒருவர், கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவமொன்று சனிக்கிழமை(26) தமிழகத்தின் சேலம்  புது பஸ் ஸ்டாண்டில் இடம்பெற்றுள்ளது.
திருவண்ணாமலை, இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த முத்துகிருஷ்ணன் சசிகுமார் (வயது 31) என்பவரே இவ்வாறு கழுத்தை அறுத்துக்கொண்டார்.
இதில் படுகாயங்களுக்குள்ளான நபர், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கோவையில் பெயின்டராக வேலை செய்து வருவதாகவும் விடுமுறை நாளில், திருவண்ணாமலை முகாமுக்கு சென்று, குடும்பத்தினரை பார்த்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் கோவையில் இருந்து, சேலம் பஸ்சில் வந்த், புது பஸ் ஸ்டாண்டில், போத்தல் ஒன்றை உடைத்து, கழுத்தை அறுத்துக் கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பள்ளப்பட்டி பொலிஸார், குறித்த நபரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .