2021 மார்ச் 04, வியாழக்கிழமை

இலஞ்சம் பெற்ற சார்ஜன்ட் கைது

Editorial   / 2017 ஜூலை 12 , பி.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாணந்துறை பிரதேசத்தில், இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ், பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

பாணந்துறை சிறப்பு குற்ற விசாரணைப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரே, இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.  

பாணந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் செய்த பண மோசடி தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய விசாரணை செய்த குறித்த பொலிஸ் சார்ஜன்ட், சந்தேகநபருக்கு பிணை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, 10 ஆயிரம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டுள்ளார்.  

இது தொடர்பில், கிடைக்கப்​பெற்ற இரகசிய தகவலுக்கமையவே, குறித்த பொலிஸ் சார்ஜன்ட் கைதுசெய்யப்பட்டுள்ளார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .