2025 ஜூலை 12, சனிக்கிழமை

'இளம் துறவியரின் கல்வி வசதிகள் மேம்படுத்தப்படும்'

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 12 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் துறவியர்களின் பிரிவெனா கல்வியிலிருந்து உயர்கல்வி வரையான அனைத்துக் கல்வி வசதிகளையும் மேம்படுத்துவதற்கு அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஞாயிற்றுக்கிழமை (11) தெரிவித்தார்.

நுகேகொட நாலந்தாராம விகாரையில் நிர்மாணிக்கப்பட்ட பிக்குமார் விடுதி மற்றும் நூலகத்துடனான இரண்டுமாக்டி கட்டடத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, இவர் இதனைத் தெரிவித்தார்.

நற்பண்புள்ள சமூகத்தை உருவாக்கும் பணிகளின் போது கல்வியறிவுடைய, ஒழுக்கமிக்க, தர்மநெறியுடைய பிக்குமார்களின் சேவை மென்மேலும் தேவைப்படுவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்கால பிக்குமார் சமூகத்தை கல்வியறிவுடைய, ஒழுக்கமான பிக்குகள் சமூகமாக உருவாக்குவதற்கான அனைத்து பொறுப்புக்களையும் அரசாங்கம் நிறைவேற்றுமெனவும் தெரிவித்தார்.

கஷ்டப் பிரதேசங்களில் குறைந்த வசதிகளுடைய விகாரைகளில் பணியாற்றும் பிக்குமாரின் கல்வி வசதிகள் உட்பட்ட ஏனைய அனைத்து அடிப்படை வசதிகளையும் நிறைவு செய்வதற்காக அரசாங்கம் புதிய செயற்றிட்டத்துக்கமைய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன, பிரதி அமைச்சர் அனோமா கமகே, மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மாகாண அமைச்சர் காமினி திலக்கசிறி ஆகியோர் உட்பட்ட மக்கள் பிரதிநிதிகளும் வெளிநாட்டு தூதுவர்களும் பிரமுகர்களும்; கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .