2021 ஜனவரி 27, புதன்கிழமை

இ.போ.ச டிக்கட் பரிசோதகர்கள் மூவருக்கு விளக்கமறியல்

Editorial   / 2019 நவம்பர் 19 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி பிரதேச அலுவலகத்தின் டிக்கட் பரிசோதகர்கள் மூவரை, அடுத்த மாதம் 3ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

பயணிகள் இருவருக்கு டக்கட் வழங்காத குற்றச்சாட்டுக்கு எதிராக, சட்டநடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு, இ.போ.ச பஸ் நடத்துநர் ஒருவரிடம் இலஞ்சம் வாங்கிய சம்பவம் தொடர்பாகவே இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இலங்கை போக்குவரத்து சபையின் கண்டி அலுவலகத்தின் டிக்கட் பரிசோதகர்கள் என்றும் இவர்கள் 20,000 ரூபாயை இலஞ்சமாகக் கோரியிருந்ததுடன், அதில் 12,000 ரூபாயை பெற்றுக்கொண்ட போதே, கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .