Kamal / 2019 நவம்பர் 09 , மு.ப. 11:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
இனவாதிகள் சகலரும் கோட்டா அணியிலேயே உள்ளதாக தெரிவிக்கம் கெபினட் அந்தஸ்த்து அல்லாத அமைச்சர், ஈழக்கொடியை ஏற்றிய வரதராஜ பெருமாள தேசத் துரோகியெனவும் தெரிவித்தார்.
கொழும்பு 02 இல் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
ஜனாதிபதி முறையை வன்முறைகள் இல்லாத தேர்தலாக நடத்துவதற்கு அரசாங்கம் முழுமையான பங்களிப்பை வழங்கிவரும் போது, எதிரணியினர் வன்முறைச் செயற்பாடுகளை செய்து வருவதாகவும் சாடினார்.
எஸ்.பி திஸாநாயக்க எம்.பியின் பாதுகாவலர்களின் செயற்பாடுகள் மீண்டும் ஆட்சி அதிகாரம் கிடைத்தால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சுட்டுக்கொல்லுவர் என்பதற்கான அறிகுறிகளாகவே அமைதுள்ளன என்றார்.
அடிப்படைவாத்தின் முக்கியஸ்தர்கள் சகலரும் இன்றளவில் கோட்டா அணியிலேயே உள்ளதாகவம், தமிழ் ஈழக் கொடியை ஏற்றிய வரதாராஜா பெருமாள் மிகப் பெரிய தேசத் துரோகியென தெரிவித்த அவர், அவரும் கோட்டா அணியிலே உள்ளார் என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .