2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அரசு வெளியிட வேண்டும் - ஜே.வி.பி

Super User   / 2010 ஜூன் 07 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயக விரோத நடைமுறைகளை நாடுவதற்கு பதிலாக உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை அரசாங்கம் உடனடியாக நாட்டிற்கு வெளிப்படுத்த வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி கோரிக்கை விடுத்தது.

கொழும்பில் இன்று ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.

இந்நிலையில், உத்தேச அரசியலமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்விருப்பதாக தெரிவிக்கப்பட்ட பேச்சுக்கள் காற்றில் பறக்கவிடப்பட்டிருப்பதாகவும் ரில்வின் சில்வா குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் இந்தியாவிற்கான விஜயத்தின்போது, இது தொடர்பில் இந்தியத் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை மேற்கொள்வார் எனவும் அவர் மேலும் கூறினார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--