2021 ஜனவரி 19, செவ்வாய்க்கிழமை

'உள்ளக விசாரணையை ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்காது'

Gavitha   / 2016 ஜூலை 20 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றம் தொடர்பில், உள்ளக விசாரணை தான் நடத்தப்படும் என்றால், அதனை ஒரு போதும் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஏற்றுக்கொள்ளாது என, அந்தக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில், நேற்று செவ்வாய்க்கிழமை (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'உள்ளக விசாரணையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கப்போவதில்லை. இராணுவத்தினருக்கு எதிராக செயற்படமாட்டோம், இராணுவத்தினை தண்டிக்கமாட்டோம் எனக்கூறும் இந்த அரசாங்கம், எதற்காக விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்?' என்று கேள்வி எழுப்பினார்.

'சர்வதேச நீதிபதிகள், சர்வதேச சட்டத்தரணிகளின் பங்களிப்பு இல்லாத எந்த விசாரணையும், தமிழ் மக்களுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க மாட்டாது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியாகிய நாம், எமது கட்சியின் நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளோம். மற்றைய பங்காளிக் கட்சிகள், தமது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்த வேண்டும்' என்று அவர் கோரினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .