Editorial / 2020 மார்ச் 05 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஓகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், மார்ச் 2 ஆம் திகதியுடன் நிறைவடைந்திருந்த நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால எல்லையை, மார்ச் 09 ஆம் திகதி வரை நீட்டித்துள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளை, மார்ச் மாத இறுதியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், இம்முறை க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைப் பெறுபேறுகளின் மாவட்ட ரீதியிலான அல்லது அகில இலங்கை ரீதியிலான தரப்படுத்தல்கள் வெளியிடப்படமாட்டாதென, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் நடைபெற்ற க.பொ.த. சாதாரணதரப் பரீட்சை 4,987 பரீட்சை நிலையங்களில் நடைபெற்றதுடன், இதில் 7 இலட்சத்து 17,008 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .