2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

எச்.ஐ.விக்கான இலங்கை மாணவனின் மருந்துக்கு ஆதரவில்லை

Thipaan   / 2016 மார்ச் 09 , பி.ப. 08:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எச்.ஐ.வி தொற்றுக்கு உள்ளாகியுள்ள நோயாளர்களுக்காக, இலங்கை மாணவனொருவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மருந்தினை மேம்படுத்துவதற்குரிய போதிய வசதிகள் இலங்கையில் இல்லை என, கொழும்பு வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனம்  தெரிவித்துள்ளது.

குறித்த மாணவனின் கண்டுபிடிப்புத் தொடர்பில் எதிர்வரும் காலங்களில் முன்னெடுக்கக்கூடிய

நடவடிக்கைகள் தொடர்பில், அம்மாணவனுக்கு தெளிவுபடுத்தவுள்ளதாக மேற்படி வைத்திய ஆராய்;ச்சி ஸ்தாபனத்தின் பணிப்பாளர் டாக்டர் சுமித் ஆனந்த கூறியுள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக குறித்த மாணவன், நனோ தொழில்நுட்பத்தையே பயன்படுத்தவுள்ளார் என்றும் அதற்குரிய வசதிகள் இலங்கை வைத்திய ஆராய்ச்சி ஸ்தாபனத்தில் காணப்படவில்லை என்றும் டாக்டர் குறிப்பிட்டார்.

எயிட்ஸ் நோய்க்கான மருந்தினைக் கண்டுபிடித்த போதிலும், அது தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு, நம்நாட்டு அதிகாரிகள் எவரும் ஒத்துழைப்பு வழங்கவில்லை என இம்மருந்தினைக் கண்டுபிடித்துள்ள கொழும்பு நாலந்தா கல்லூரியின் மாணவன் ரக்கித மாலேவன, குற்றச்சாட்டொன்றை முன்வைத்துள்ளார்.

இந்தக் கண்டுபிடிப்புக்காக, வைத்திய பரிசோதனைகளுக்கான சர்வதேச ஒலிம்பியாட் தங்கப் பதக்கத்தை கடந்த வருடம் வென்ற இந்த மாணவன், 'இந்த மருந்து தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளுக்கு இலங்கை ஒத்துழைக்காமையினால், சர்வதேச நாடொன்றின் ஒத்துழைப்புடன் அதனை தொடர்ந்து முன்னெடுக்க நடவடிக்கை எடுப்பேன்' எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த மருந்து தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கான தொழில்நுட்ப வசதிகள் இலங்கையில் இல்லை என்றே டாக்டர் சுமித் ஆனந்த குறிப்பிட்டார்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--