Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஜூலை 26 , மு.ப. 01:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
'மலையக மக்கள், 12 ஆண்டுகளுக்குப் பின்னர், என்னை அமைச்சராக தெரிவுசெய்துள்ளனர்;. அவர்கள், இதுவரை வாழ்ந்து வந்த வாழ்க்கை முறையை மாற்றுவதற்காக இடப்பட்ட விதையே, இந்த அமைச்சுப் பதவியாகும்' என்று தெரிவித்த மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், 'தமிழ் முற்போக்குக் கூட்டணியை பிளவுபடுத்துவதற்கு பலரும் முயற்சிகின்றனர். எந்தக் கொம்பன் வந்தாலும் அது நடக்காது' என்றும் அவர் கூறினார்.
நடக்காது' என்றும் தெரிவித்தார். 'பெருந்தோட்டப் பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திப் பணிகளை தடுக்க முயல்பவர்களை, மக்கள் விரட்டியடிக்க வேண்டும். இம் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளை தானும் செய்வதில்லை, செய்பவர்களைச் செய்யவிடுவதுமில்லை.
இந்நிலை தொடர்ந்ததால்தான், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைத்து உரிமைகளும் கிடைக்கப்பெறாமல் ஓரங்கட்டப்பட்;டவர்களாக இருந்துவந்துள்ளனர்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மெரயா, ஊவாக்கலை வெள்ளிமலை வரையில் செல்லும் வீதியின் நிர்மாணப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. அதில், கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
'தமிழ் முற்போக்குக் கூட்டணி எனும் விதை முளையிட்டு ஓங்கி வளருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாதவர்கள், அதனை இடையில் வேரறுக்க நினைக்கின்றனர். இது அவர்களின் கனவில் கூட நிறைவேறாது' என்றார்.
'தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு, நுவரெலியா, கண்டி, பதுளை, கொழும்பு என நான்கு மாவட்டங்களிலும் வாழும் மக்கள் ஆதரவளித்துள்ளனர்.
இதனடிப்படையில், நல்லாட்சி அரசாங்கத்தில் கிடைக்கப் பெற்றுள்ள நன்மதிப்பைக் கொண்டு செயலாற்றும் கூட்டணியின் தலைவர்களை பிரிக்க எவராலும் முடியாது' என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, 'லயன் வாழ்க்கையில் இருந்து தொழிலாளர்களை அகற்றி, தனிவீடுகளில் கௌரவமாக வாழும் முறையை இலக்காகக் கொண்டே நாம் செயலாற்றுகின்றோம். வீடு, காணி, கல்வி மற்றும் தொழில் என்பவற்றைப் பெற்றுக் கொடுத்து 2020 ஆம் ஆண்டுக்குமுன் பாரிய மாற்றத்தை மலையகத்தில் ஏற்படுத்துவதே கூட்டணியின் நோக்கமாகும்' எனவும் அவர் கூறினார்.
4 hours ago
17 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
17 Sep 2025