2020 நவம்பர் 30, திங்கட்கிழமை

எப்படி முடியும்: சம்பந்தன் கேள்வி

Kanagaraj   / 2016 மார்ச் 08 , பி.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

'பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இரத்து செய்வதாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அரசாங்கம் ஒப்புதல் அளித்துவிட்டு, அச்சட்டத்தின் கீழ் நபர்களை தடுத்து வைத்திருக்கவோ அல்லது தண்டிக்கவோ எப்படி முடியும்' என்று எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பியுமான இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பினார்.

பலவந்தமான முறையில் காணாமல் போதல்கள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பிலான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை, நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை, சமர்ப்பித்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

'காணாமல் போனவர்கள், தமது உறவினர்கள் பற்றி அவர்களுடைய குடும்பத்தினர் ஆணைக்குழுக்கள் பலவற்றின் முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர். அவ்வாறான சாட்சியங்களின் அடிப்படையில் தம்வசம் வைத்துள்ள திட்டம் என்ன என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்தவேண்டும்' என்றும் அவர் கோரிநின்றார்.

'காணாமல் போனவர்களின் விவாகரம் தொடர்பில் கடந்த அரசாங்கம் என்ன செய்தது என்று எமக்கு தெரியும் என்பதனால், புதிய அரசாங்கமானது இந்த விவகாரத்தில் தீர்க்கமாக செயற்பட்டு தீர்க்கவேண்டும்' என்றும் அவர் கூறினார்.

'அதேபோல, பரணகம ஆணைக்குவுக்கு, காணாமல் போனவர்கள் தொடர்பில் கடந்த ஒகஸ்ட் மாதம் 15ஆம் திகதி வரையிலும் 17,329 முறைபாடுகள் கிடைத்துள்ளன' என்றார்.

'யுத்தம் நிறைவடைந்து 6 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் காணாமல் போனவர்கள் தொடர்பில் எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கமானது இந்த விவகாரத்துக்குத் தீர்வு காணவேண்டும்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .