Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 22 , மு.ப. 04:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாநூ கார்த்திகேசு
'225ஆக இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255ஆக அதிகரிப்பதற்கான தேவை ஒன்றுள்ளது.
பெரும்பான்மை ஆட்சி பலத்துடன் ஒரு கட்சி தனித்து ஆட்சியமைப்பதற்கு, தற்போதுள்ள முறைமை சிக்கலானதாக உள்ளது. எனவே, இதனை மாற்றியமைப்பதற்கான ஏற்பாடு விரையில் முன்னெடுக்கப்படும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சியின் தலைமையகத்;தில், நேற்று (21) நடைபெற்ற ஊடகவியலாளர் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'அரசியலமைப்புச் சீர்திருத்தம் தொடர்பிலான ஆலோசனையைப் பெறுவதற்கு நோர்வே நாட்டைச் சேர்ந்த வல்லுநர் ஒருவர் வந்திருக்கின்றார். அவர் இந்த விடயம் தொடர்பிலான ஆய்வுகளை முன்னெடுத்து வருகின்றார். ஜேர்மனி, பிரான்ஸ் போன்ற பல நாட்டுச் சட்டங்கள் தொடர்பிலான அறிவினை அவர் பரந்தளவில் கொண்டுள்ளார். அவருடைய கருத்தும் இந்த அரசியலமைப்பினுள் உள்வாங்கப்படவுள்ளது என்றும் அவர் கூறினார்.
'தொகுதிவாரிப் பிரதிநிதித்துவம், விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்வு ஆகிய இவ்விரண்டு தேர்வு முறைகளின் மூலமும் 50 சதவீதமான தெரிவு முறைகளை மேற்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளோம். விகிதாசாரமோ, தொகுதிவாரியோ தனித்து நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது.
'காணமற்போனோர் தொடர்பில் விசாரணை செய்வதற்கான அலுவலகமொன்றை ஸ்தாபிக்கப்படுவதானது வெறும் ஓர் அறிக்கை மாத்திரமே. அது சட்டமூலமாக்கக்கப்படவில்லை. குறித்த அலுவலகத்தினால் தேசத்தின் பாதுகாப்புக்குக் குந்தகம் என அறியப்படுகின்ற பட்சத்தில், உயர் நீதிமன்றம் அதில் தலையிடும்.
'குழப்பகரமான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் தற்போதைய அரசாங்கம், „டீலிங்... முறையில் அமைக்கப்பட்ட அரசாங்கம் எனவும் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார்.ஆனால், குறித்த சீர்திருத்தக் குழுவுக்குள், ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் அங்கத்துவம் வகிக்கின்றனர்.
'ஐக்கிய தேசியக் கட்சியுடன் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி „டீலிங்... முறையான ஆட்சியை செய்யவில்லை. நாங்கள் வெளிப்படையான முறையில் ஒப்பந்தங்களை மேற்கொண்டே ஆட்சியமைத்தோம்' என்றும் அவர் கூறினார்.
2 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago