2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளராக ராம் போட்டியிடுவாரா?

Super User   / 2010 ஜூலை 01 , பி.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் மேயர் வேட்பாளராக தன்னை நிறுத்துவதாக  கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ உறுதிமொழி அளித்துள்ளதாக மேல் மாகாண சபை உறுப்பினர் சீ.வை.பி.ராம் தமிழ்மிரர் இணையதளத்திற்கு சற்று முன் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும், இறுதி நேரத்தில் ரவி கருணாநாயக்கவால் தடுக்கப்பட்டது. அப்போது கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்ஹ மற்றும் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம். முஸம்மில் உட்பட கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தன்னை மேயர் வேட்பாளராக நிறுத்துவது என ஏற்றுக்கொண்டதாக ராம் குறிப்பிட்டர்.

மேலும், தன்னை மேயர் வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் கட்சியின் தலைமைத்துவமே தீர்மானிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர்களில் ஒருவரான சீ.வை.பி.ராம் தெரிவித்தார்.(R.A)

  Comments - 0

 • A.C.M. Ali Saturday, 03 July 2010 01:01 AM

  ராம் அவர்கள் அனைத்து இன மக்களுக்காகவும் குரல் கொடுக்கும், உதவிகள் செய்யும் மனிதநேயமுல்ல் ஒரு தலைவர். ஆகவே ரணில், ராமை கொழும்பு மாநகர முதல்வராக நியமித்து காப்பற்றவேண்டும்.

  Reply : 0       0

  jessie babu Friday, 02 July 2010 05:17 AM

  ரணில் கொடுத்த வாக்கை திருப்பி வாங்க முடியாது மற்றும் கூடாது. தமிழ் மக்களுகாக ஒரு தமிழ் தலைவர் எமக்கு தேவை!

  Reply : 0       0

  sivanandan Friday, 02 July 2010 05:54 AM

  ராம் தமிழ் பேசும் சிறுபான்மை மற்றும் சிங்கள மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஒரு அரசியல்வாதி. ரவி கருணாநாயக்கா ராமை எதிர் கொள்ள முடியாத காரணத்தால் ராமிக்கு எதிராக சூழ்ச்சியில் ஈடுபட்டார். தமிழ் மக்கள் ரவி கருணாநாயக்காவை மன்னிக்க கூடாது. ராம் அவர்கள் எதிர்வரும் மாநகர தேர்தலில் முதல்வர் வேட்பாளராக களம் இரங்க சிறுபான்மை மாற்றுக் பெரும்பான்மை மக்களின் சார்பில் எங்கள் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.

  Reply : 0       0

  xlntgson Friday, 02 July 2010 09:15 PM

  முஸ்லிம்களின் வாக்குகளை ஆசாத் சாலி அல்லது ஓமர் காமில் இருவரும் பிரிக்கும் நிலையில்- ராம்! ராம்!! ஐ.தே.க.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--