2021 மே 06, வியாழக்கிழமை

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு செல்ல புதிய விசா விண்ணப்பம்

Princiya Dixci   / 2016 ஜூலை 29 , மு.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு செல்வதற்காக விசா விண்ணப்பிப்போருக்கு, புதியதொரு விசா விண்ணப்பப்படிவம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.  

இந்தப் புதிய விண்ணப்பப்படிவத்தை நிரப்புவதற்கு இலகுவாகவும் விண்ணப்பிப்பதற்கு இலகுவாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வாடிக்கையாளர்களுக்கு இலகுவில் பதிலளிக்கக்கூடிய தர்க்கரீதியான முறையில் வடிவமைக்கப்பட்ட கேள்விகளுடனாக சிறிய படிவம், வாடிக்கையாளர்கள் தங்களது விடைகளை ஆங்கிலத்தில் வழங்க வேண்டும் என்றாலும் உள்நாட்டு மொழிகள் அடங்கியிருத்தல், விண்ணப்பிப்புக்கான பணம் செலுத்தும் தொகை உள்நாட்டு பணத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருத்தல், அலைபேசிகளிலும் விண்ணப்பிக்கக்கூடிய முறை, வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விண்ணப்பிக்கவும் அல்லது விசா விண்ணப்ப நிலையத்தில் நியமனம் ஒன்றை பெற்றுக்கொள்வதற்கும் சலுகை, விண்ணப்படிவத்தை தரவிறக்கம் செய்து மீண்டும் தரவேற்றம் செய்யக்கூடிய வசதி போன்ற பல்வேறு வசதிகளை இந்த புதிய விசா படிவ முறைமை மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .