2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

’ஐ.தே.கவில் சிங்கள - பௌத்த அடிப்படை இழப்பு குறித்து அவதானம்’

J.A. George   / 2019 நவம்பர் 22 , பி.ப. 02:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிங்கள - பௌத்த அடிப்படை இழப்பு குறித்து அவதானத் செலுத்துவதுடன், இனிமேல் அவ்வாறான ஒன்று இடம்பெற இடமளிக்கப்படமாட்டாது” என, முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இன்று (22) முற்பகல் சிறிகொத்த கட்சி தலைமைகத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.

அவர் அங்கு உரையாற்றுகையில், “ எமது கட்சியில் சிங்கள - பௌத்த அடிப்படை இழக்கப்படுவது குறித்து நாங்கள் முதலில் அவதானம் செலுத்த வேண்டும். இதற்கு முன்னர் இவ்வாறான ஒன்று இடம்பெற்றிருக்கவில்லை.

இது தொடர்பில் நாங்கள் விசேடமாக தேடிப்பார்க்க வேண்டும்.  அதன் ஊடாக, எதிர்கால தீர்மானங்களை எடுக்ப்பதுடன், பகுப்பாய்வும் மேற்கொள்ளப்படவேண்டும்.

தேர்தல் தோல்வி குறித்து யாரை நோக்கியும் விரல் நீட்டுவதை விடுத்து, தோல்விக்கான காரணங்களை பகுப்பாய்வு செய்து நாங்கள் முன்னோக்கி செல்லவேண்டும்.

அதனைவிடுத்து, ஒவ்வொருவர் மீதும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கொண்டிருப்பதில் பயணில்லை. மகாநாயக்க தேரரர்களின் ஆசிர்வாதம் பெற்று முன்னோக்கி செல்ல நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .