2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

’ஐ.தே.க உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இரகசிய தொடர்பு’

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 03:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய முன்னணியில் அங்கம் வகிக்கின்ற சிறுபான்மை பங்காளி கட்சிகள், ஐக்கிய தேசியக் கட்சியின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக அதிருப்தியில் உள்ளதை அவதானிக்க முடிகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைப் பதவி தொடர்பாக  இழுபறி நிலைமை நீடிக்கும் நிலையில்,  இந்த அதிருப்தி நிலை ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில், முன்னணியில் அங்கம் வகிக்கும்  ஜனநாயக மக்கள் முன்னணித் கட்சியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்குள் புதிய இரத்தம் பாய்ச்ச கட்சி தலைமை தயாரில்லை போல் தெரிகிறது என்று குறிப்பிட்டுள்ள மனோ கணேசன், இக்கட்சியுடன் கூட்டணியில் இருப்பதாலும், "எடுத்தேன், கவிழ்த்தேன்" என்ற முதிர்ச்சியற்ற அரசியலை எப்போதும் செய்யாததாலும் இது பற்றி அக்கறை கொள்ள வேண்டியுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், “கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் இரகசியமாக ஆளும் கட்சியுடன் உறவாடி அரசாங்கத்துக்கு 2/3 பெரும்பான்மை பெற்றுத்தர திட்டமிட்டு செயல்படுவதாகவும் தெரிகிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"பங்காளி சிறுபான்மை கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும். நாம் ஐதேகவாக தனித்து போட்டியிடுகிறோம்" என நவின் திசாநாயக்க சொல்லி பார்க்கிறார். "அப்படி சொல்ல வேண்டாம்" என நவீனை திருத்த ரணில் விக்கிரமசிங்க தயாராகவுமில்லை.

எல்லோரும் தனித்து போட்டியிட்டால், இது ஆளும் கட்சிக்கு 2/3 சுலபமாக பெற்று தரும். ஆகவே இது ஆளும் கட்சியின் இரகசிய திட்டம்.

இப்படி ஐக்கிய தேசியக் கட்சி இரகசியமாக உறவாடுவது, செயற்படுவது, சில சிறுபான்மை பங்காளி கட்சிகள் மத்தியில் ஆளும் கட்சியுடன் பகிரங்கமாகவே பேசுவோம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதை என்னால் உணர முடிகிறது” என்றும் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “16ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதி சமரச கூட்டத்தில் தீர்வு எட்டப்படாவிட்டால், விளைவுகள் பாரதூரமாகலாம்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .