2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

’ஐ.நாவில் ஜனாதிபதி 15 நிமிடங்கள் உரையாற்றுவார்’

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

- மேனகா மூக்காண்டி

ஐக்கிய நாடுகள் சபையின் 73ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடர், கடந்த செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதில் கலந்துகொள்வதற்காக, இன்னும் ஓரிரு தினங்களில் நியூயோர்க்கு பயணமாகவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள அரச தலைவர்களின் மாநாட்டில், ஏழாவது தலைவராக, சுமார் 15 நிமிட, விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.

​முன்னதாக, எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமையன்று, உலக போதைப்பொருள் தொடர்பான சர்வதேசச் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலிலும், ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதுடன், தொடர்ந்து இடம்பெறவுள்ள நெல்சன் மண்டேலா சமாதானக் கூட்டத்தொடரில் பங்கேற்று, சுமார் 3 நிமிட உரையை ஆற்றவுள்ளார்.

தொடர்ந்து, 26ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி வேலைத்திட்டத்தில், இலங்கைக்கான புதிய நிதியமொன்றை உருவாக்குவாற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட உள்ளதோடு, தொடர்ந்து மறுதினம் நடைபெறவுள்ள தொற்றா நோய்களை முற்றாக ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்களின் வெற்றி குறித்து நடைபெறவுள்ள கலந்துரையாடலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதம அதிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.

தொடர்ந்து, 28ஆம் திகதியன்று, ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்களைச் சந்திக்கவுள்ள ஜனாதிபதி, அவர்களுடன், இலங்கையின் நிலவரம் தொடர்பில் பேசவுள்ளாரென்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X