2021 ஏப்ரல் 20, செவ்வாய்க்கிழமை

ஒத்துழைக்க மறுத்தால் கடும் நடவடிக்கை

Editorial   / 2020 மார்ச் 12 , பி.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெளிநாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தபட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்க வேண்டியது அவசியமென தெரிவிக்கும் அமைச்சர் விமல் வீரவன்ச, ஒத்துழைக்க மறுப்போருக்கு எதிராக அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க நேரிடும் என்றார். 

கொழும்பிலுள்ள கைத்தொழில் மற்றும் முகாமைதுவ வழங்கள் முகாமைத்துவ அமைச்சில் நேற்று (12) ந​டைபெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக தொழிற்சாலைகளின் உற்பத்தி பொருள்களுக்கான மூலப்பொருள்களுக்கு தற்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவ்வாறான சிறு மற்றும் மத்திய தர தொழில் உரிமையாளர்களுக்கு உதவ அரசாங்கம் முன்வந்துள்ளது என்றார். 

அதற்கமைய இவ்வாறான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ள தொழில் உரிமையாளர்கள் 011 3144416 என்ற இலக்கத்துக்கு அழைத்து தாம் ​எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பாக அறிவுறுத்த முடியும் என்றார். 

அவ்வாறு அறிவிக்கும் தொழில் உரிமையாளர்களை தனித்தனியாக அமைச்சுக்கு அழைப்பிக்கப்பட்டு அவர்களது பிரச்சினைகள் தொடர்பாக ஆராயப்படும் என்றும்,தமிழ்,சிங்களம், ஆங்கிளம் என மூன்று மொழிகளிலும் அறிவிக்க முடியும் என்றார். 

அத்தோடு, இலங்கையில் இன்றும் கொரோனா தொற்று உக்கிரமாக பரவவில்லை எனத் தெரிவித்த அவர்,  இலங்கையின் எந்தவொரு பகுதியையும் மூடிவைக்கும் நிலைமை தோன்றவில்லை என்றார். 

இவ்வாறிருக்க கொரோனா தொற்று பரவிய நாடுகளிலிருந்து வரும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தபட்டு மருத்துவ பரிசோதனை நடத்தும் செயற்பாட்டை விரும்பவில்லை என்றும், அவர்களுக்கு அயலவர்கள் மீது அன்பிருந்தால் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்குமாறு கோரியானார்.

அவ்வாறு ஒத்துழைக்க தவறும் பட்சத்தில், அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க நேரிடுமெனவும்,  அரசாங்கத்தின் தேவைக்காக மாத்திரம் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்றார்.

அத்தோடு குறித்த வைரஸ் தொற்று உக்கிரமாக பரவலடைந்த சீனா உள்ளிட்ட போன்ற நாடுகள் அதற்கு முகம்கொடுத்துவிட்டு அந்த தொற்றிலிருந்து சிறிதளவு மீண்டு வருவதாக தெரிவித்த அவர்,  கொரோன தொற்றின் தன்மையை அறிந்துகொண்டு சகலரும் செயற்பட வேண்டியது அவசியமெனவும் தெரிவித்தார்.

அதேபோல் தொழிற்சாலைகளில் எவருக்கேனும்,  கொரோனா தொற்று பரவியிருந்தால்,  தொழிற்சாலைகளில் பணியாற்றும் சகல ஊழியர்களை தனிமைப்படுத்தி மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்துமாறும் கோரினார். 

இவ்வாறிருக்கு மே, ஜுன் மாதமளவில் இந்த பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு உலக நாடுகள் வழமைக்கு திரும்புமென எதிர்பார்ப்பதாக தெரிவித்த அவர் ,ஜேர்மன் போன்ற நாடுகளை விடவும் சிறந்த முறையிலேயே இலங்கையில் தனிமைப்படுத்தபட்ட மருத்து பரிசோதைனகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .