2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

’ஒன்றிணைந்த எதிரணி முதலைக் கண்ணீர் வடிக்கிறது’

Kamal   / 2018 செப்டெம்பர் 19 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொது வேட்பாளராக களமிறங்கிய போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றதென குற்றம்சாட்டிய பிரதி அமைச்சர் அஜித் மானப்பெரும, ஒன்றிணைந்த எதிரணி முதலைக் கண்ணீர் வடிக்கிறது எனவும் தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்ட அவர் மேலும் கருத்துரைக்கையில்,

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் பொது வேட்பாளராக களமிறங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற்றன. ஆனால், இன்று ஜனாதிபதியின் பாதுகாப்பில் அக்கறை கொண்வர்கள் பேசுகின்ற ஒன்றிணைந்த எதிரணியினர் முதலைக்கண்ணீர் வடிக்கின்றர் என்றார்.

உண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பாதுகாப்பில் எமக்கே  அக்கறையுள்ளதென்றும் தெரிவித்தார்.      


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .