Gavitha / 2017 மே 20 , மு.ப. 05:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை உடனடியாக நடத்தமாறு கோரி, ஒன்றிணைந்த எதிரணியினர், நாடு தழுவிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளனர்.
இது தொடர்பாக, ஒன்றிணைந்த எதிரணியின் நாடளாவிய ரீதியிலுள்ள தேர்தல் அமைப்பாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்படும் என்று, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டதரணி சிசிற ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
வடமத்திய, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாண சபையின் பதவிக் காலம் நிறைவடையவுள்ளதாலும் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பங்கள் காரணங்களினாலும், இரண்டு தேர்தல்களையும் உடனடியாக நடத்துமாறு, வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்று அவர் குறியுள்ளார்.
இந்த ஆர்ப்பாட்டம் தொடர்பான விரிவான தகவல்களை, அடுத்த வாரம் அறிவிக்கவுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.
23 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
51 minute ago
59 minute ago
1 hours ago