Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 ஜனவரி 15 , மு.ப. 10:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராஜாங்க அமைச்சர்களுமான எஸ்.பி.திஸாநாயக்க, லக்ஷமன் யாப்பா அபேவர்தன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா ஆகியோர், இம்மாதம் 18ஆம் திகதியன்று, சுதந்திர கட்சியின் ஒழுக்காற்று குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
மேற்படி உறுப்பினர்களுக்கு எதிராக (18) இறுதிகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமென ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.
அதேநேரம், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் பொதுஜன பெரமுனவும் இணைந்து அமைக்கவுள்ள பொதுக் கூட்டணி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில், மொட்டு சின்னல் களமிறங்குமா அல்லது நாட்காலி சின்னத்தில் களமிறங்குமா என்பதுத் தொடர்பாக உயர்மட்ட குழுவினரின் சந்திப்பொன்றில் தீர்மானிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அலுவலகத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி கூட்டணியாக போட்டியிடும் போது மாற்றுச் சின்னங்களையே பயன்படுத்தியதாகவும், நாட்காலி, வெற்றிலை போன்ற சின்னங்களை சுதந்திரக் கட்சியின் பாதுகாப்பு நிமித்தமே பயன்படுத்தியிருந்தாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும் ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கலந்துரையாடி சின்னம் தொடர்பான முரண்பாடுகளைத் தீர்த்துகொள்ளவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.
சின்னம் தொடர்பான விடயங்களால், இரு கட்சிகளுக்குமிடையில் முரண்பாடுகள் எவையும் இல்லை என்றும், பொதுக் கூட்டணிக்கு மொட்டு சின்னத்தை அறிவித்தால் பொதுஜனவின் மொட்டு சின்னத்தை இழக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் இதுவரைக்காலமும் சுதந்திரக் கட்சியே முன்னணிக் கட்சியாக இருந்தமையால் மற்றையவர்களை முடக்கி வைக்கும் வழக்கம் கட்சியில் உள்ளவர்களுக்கு இருந்தெனவும் இன்று அதேச் செயற்பாட்டைதான் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.
10 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago