2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

ஓ.எம்.பி சிபாரிசுகள் நடைமுறைப்படுத்துவதற்கு 10 பேரடங்கிய துணைக் குழு

Editorial   / 2018 செப்டெம்பர் 20 , மு.ப. 07:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

எஸ்.ஷிவானி

காணாமற்போனோர் அலுவலகத்தால் (ஓ.எம்.பி), ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்பட்டுள்ள இடைக்கால அறிக்கையில் குறிப்பிடப்பட்டள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு, 10 அமைச்சர்களைக் கொண்ட துணைக் குழுவொன்ற நியமிப்பதற்கு  அமைச்சரவை அங்கிகாரமளித்துள்ளது.

 

காணாமல்போனோர் அலுவலகத்தின் இடைக்கால அறிக்கை, ஓகஸ்ட் மாதம் 5ஆம் திகதியன்று கையளிக்கப்பட்டது. அது தொடர்பிலான அமைச்சரவைப் பத்திரமொன்றை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நேற்று முன்னதினம் (18) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தின் போது சமர்ப்பித்திருந்தார்.

அந்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளதுடன், அந்தக் குழு, அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவின் த​லைமையில் நியமிக்கப்படவுள்ளது.

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முகங்கொடுக்கும் பாதிப்பை ஈடுசெய்யக்கூடிய சட்டரீதியிலான பொறுப்புக்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை,  இவ்வாறான சம்பவம் மீண்டும் இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வதற்கான, சட்ட ரீதியிலான மறுசீரமைப்பு மேற்கொள்வது தொடர்பில் சிபாரிசுகள், அந்த இடைக்கால அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நிதி உதவி வேலைத் திட்டம் கடன் நிவாரண வேலைத் திட்டம், வீடமைப்பு அபிவிருத்தி வேலைத் திட்டம், கல்வி நடவடிக்கைகளுக்கு தேவையான நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டம், தொழிற்பயிற்சி, வாழ்க்கை நிலையை மேம்படுத்துதல், தொடர்பான சிபார்சுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இந்த சிபார்சுகளை மதிப்பீடு செய்து, பொருத்தமான எதிர்கால நடவடிக்கைகளுக்கு பரிந்துரைப்பதற்காகவே,  அமைச்சரவை துணை குழு ஒன்றை நியமிப்பதற்கும், துணைக் குழுவின் ஆலோசனைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், தேவையான வசதிகளை செய்வது தொடர்பிலும் அமைச்சரவைப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--