2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குடும்பஸ்தர் கைது

Niroshini   / 2017 ஜூன் 10 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத், ஒலுமுதீன் கியாஸ்

திருகோணமலை  பொலிஸ் பிரிவு 4 ஆம் கட்டை - சங்கமம் பகுதியில் 150 கிராம் கேரளா  கஞ்சா விற்பனைக்கு  வைத்திருந்த 36  வயது  குடும்பஸ்தார் ஒருவர்,  இன்று  (10) சனிக்கிழமை காலை விசத்தன்மையுடைய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடமிருந்து பக்கெட் செய்யப்பட்ட நிலையில் 100 கிராம் கேரளா கஞ்சாவையும்  தனியாக வைத்திருந்த 50 கிராம் கேரளா கஞ்சாவையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலுக்கமையவே, குறித்த நபரை கைதுசெய்ததாக, திருகோணமலை பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவுப் பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜனோஜன் தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்ட நபரை, திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை, முன்னெடுத்துள்ளதாகவும் பொறுப்பதிகாரி மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X