2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்து விசாரிக்க நடவடிக்கை?

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையில் இருந்து இடைநீக்கம் செய்து அவருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ள அந்தக் கட்சி தயாராகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகளவானவர்கள் இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் எதிர்வரும் வியாழக்கிழமை இடம்பெறவுள்ள கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தின்போது, இது தொடர்பில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .