2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கூட்டு ஒப்பந்த முறைமை ’முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்’

Editorial   / 2018 செப்டெம்பர் 18 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

பா.நிரோஸ்

இம்முறை குறுகிய காலத்துக்குள் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள, அருட்தந்தை மா.சக்திவேல், எதிர்காலத்தில், கூட்டு ஒப்பந்த முறைமை முற்றுமுழுதாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அதேபோல், இம்முறை செய்துகொள்ளப்படவுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் உள்ளடக்கத்தை, தொழிலாளர்களுக்குத் தெரியப்படுத்துவதற்கு, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் முன்வரவேண்டும் என்றும் கோரியுள்ளார்.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள மலையக சமூக ஆய்வு மையம், கோரிக்கைகள் அடங்கிய கடிதங்களை, ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம், தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியவற்றுக்கு, நேற்று (17) கையளித்தது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், தோட்டக் கம்பனிகள், கூட்டு ஒப்பந்தத்தைத் தொடர்ச்சியாக மீறி வருவதாகக் குறிப்பிட்டதோடு, "அவுட்குரோவர்" எனப்படும், வெளியால் உற்பத்தி முறையை நடைமுறைப்படுத்தி வருவதை, அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கடந்தகால கூட்டு ஒப்பந்தங்களைப் போல் அல்லாது, இந்த முறை ​செய்துக்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தத்தின் உள்ளடக்கம் பெருந்தோட்ட மக்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டு, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தப் பின்னரே கைச்சாத்திடப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

கூட்டு ஒப்பந்தம் என்கிற சம்பள அதிகரிப்பு ஒப்பந்தத்துக்குப் பின்னால், மலையக மக்களின் கூட்டு வாழ்க்கையைச் சிதைத்து, அவர்களை சொந்த நிலத்திலிருந்து வெளியேற்றும் சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனவெனத் தெரிவித்த அவர், மலையகத்தை மெல்லக்கொல்லும் ​கூட்டு ஒப்பந்தமுறை, முற்றுமுழுவதுமாக ஒழிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--